Posts

மசாலா கதை

Image
  மசாலா கதை இடது கையில் ஏற்பட்ட வெட்டுக் காயத்திலிருந்து ரத்தத் துளிகள் சொட்டு சொட்டாக கீழே விழுந்தன. அதை கவனித்த மறுகணமே டக்கென்று அந்த ஆள் காட்டி விரலை வாயில் வைத்து சுவைக்கத் தொடங்கினாள் வர்ஷா. அப்போதுதான் வலியின் வீரியமும் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய தொடங்கியது. தலையை சற்று அண்ணாந்து பார்க்க முயற்சி செய்தாள். மேலே உள்ள மரப்பலகை இடித்தது, எனவே அந்த முயற்சியை கைவிட்டாள். சுற்றி முற்றி பார்த்தாள். முற்றிலும் இருட்டாக இல்லை. இடுக்குகளிலிருந்து வெளிச்சத்தின் ஒளி ஆங்கங்கே தெரிந்தது. தன் கைகளையும் கால்களையும் அசைத்து எதையும் தட்டிவிட்டு விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார் வர்ஷா. இருப்பினும் சில நிமிடங்கள் கூட அவளால் ஒரே தோரணையில் கால்களையும் கைகளையும் குறுக்கி தலை சற்று குனிந்தவாறு    அமர முடியவில்லை. அவன் வந்து விடுவானோ? தன் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து விடுவானோ? என்ற பயம் அவளை மேலும் ஆட்கொண்டது. நெற்றியும் கைகளும் வியர்க்கத் தொடங்கியது. தன் இருதயத்துடிப்பு அசாதாரணமாக இருப்பதை உணர்கிறாள். இரண்டு உயிர்களின் மரண ஓலம் கேட்கிறது. சற்று நிதானித்து அமைதியாகவே இருக்கிறாள் வர்ஷா. திடீரென அவன் ந

கசிந்துருகி...

Image
  கசிந்துருகி... இடதுகையால் ஸ்டீயரிங் வீலை ஒருபக்கமாக வளைத்துக் கொண்டே, வலதுகையால் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்த ரஷ்ய மொழி பாடலின் ஒலி அளவை சன்னமாக குறைத்து, பிரேக்கில் இதமாக காலை வைத்து அழுத்தினான் ஆண்ட்ரியா. பாட்டிலில் இருந்த சுடுநீரை அனிச்சையாக ஒருமுறை குடித்து வைத்தான். பின்னர்,  வண்டியை விட்டு இறங்கி வழக்கம் போல், சர்ச் வாசலருகே ஓரமாக நின்றான். தனது சிறு வயதில் இருந்தே, தன் தந்தை சொல்லிக்கொடுத்த பழக்கம் அது. மார்ட்டின் அந்தச் சர்ச்சில் தான் பணிபுரிந்தார். இறக்கும் முன், தன் தந்தை தன்னிடம் சொன்ன ஒரே வேலையை ஒரு கணம் நினைத்துக் கொண்டான். தனக்கே உரிய பாணியில் கடவுளை வேண்டிய பிறகு, எதார்த்தமாக சுற்றி முற்றி பார்த்தான் ஆண்ட்ரியா.  தோளில் இருந்த துப்பாக்கியை சரி செய்துகொண்டு, காரை ஓட்ட தொடங்கினான்.  முழு இருளும் அல்லாத முழு ஒளியும் அல்லாத, அந்த ஸ்வால்பார்ட் தனித்துவத்தை வழக்கம்போல் ரசித்தபடியே மெதுவாக வாகனத்தை செலுத்தினான் ஆண்ட்ரியா. சாலையில் வேறு எந்த வாகனங்களும் இல்லை. தூரத்தில் ஓரிரண்டு பனிக்கரடிகள் மட்டும் அமர்ந்திருந்தன. ஜோனாஸ் தனது நான்கு நாய்களையும் கயிறுகளில் பூட்டி, சாலையோரமாக ஓ

வாசக நாய்கள்

Image
  வாசக நாய்கள் "சரி டா.. அஞ்சு மணிக்கு பாக்கலாம்!" என்று தொலைபேசியை வைத்தார் திரு. இது தினமும் நிகழும் ஒரு தொலைபேசி உரையாடல். மணியுடன் பேசவில்லை என்றால் திருவுக்கு அந்த நாள் ஓடாது. தன் பணி ஓய்வு வாழ்க்கையில் இதை ஒரு தினசரி சடங்காகவே வைத்திருந்தார் திரு, தன் மனைவியின் படத்திற்கு மாலை சூடுவதைப் போல. அவருக்கு இருக்கும் ஒரே துணை ரோஜர். தினமும் மாமிசம் சாப்பிடவேண்டும். வேறு எதையும் உடம்பு ஒத்துக்கொள்ளாது. இந்த இரண்டு ஜீவன்களுக்கும் சமைத்து பரிமாறுவது விமலாவின் வேலை. விமலாவை வேலைக்கு பரிந்துரைத்தது மணி தான். தன் நண்பனுக்கு உணவு சமைப்பதில் பரிமாறுவதில் உதவியாக ஒருவர் இருந்தே ஆகவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று, தன் வீட்டில் வேலை செய்த விமலாவை வேண்டிக் கேட்டுக் கொண்டு திரு வீட்டிலும் சமைக்க ஒப்புக்கொள்ள வைத்தார்.  மணி வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் திரு ரோஜரயும் கூட்டிக்கொண்டு செல்வார். ரோஜருக்கு கெவின் என்றால் ஒரு தனி  பிரியம் தான். கிட்டதட்ட மணியையும் திருவையும் போல தான் ரோஜரும் கெவினும்.. இருவரும் சந்திக்கும் பொழுது, ஒரே தட்டில் தான் சாப்பிடுவார்கள்.. கடைசியில் இருக்கும் ஒரு எலு

தலைப்பைத்தேடி...

Image
தலைப்பைத்தேடி... பதினெட்டு... பத்தொன்பது.. இருபது.. அப்பா!! அப்பப்பா!! தினமும் எண்ணிக்கொண்டே இந்த இருபது படிகளை ஏறி இறங்குவது கௌரி மாமிக்கு வாடிக்கை. 20ஆவது படியை அவள் பாதங்கள் தொட்ட மறுகணமே அனிச்சையாக அவள் இதயத்துடிப்பு இலகுவாகும். படிகளின் ஓரம் உள்ள சற்று ஆடிக்கொண்டிருக்கும் கைப்பிடியை சந்தேகத்தோடு பிடித்தவாறு இருபத்தோராம் படியில் உள்ள திட்டு போன்ற இடத்தில் தனது பெரிய கைப்பையை வைக்கிறாள். அந்த மூட்டையின் எடை ஒரு பத்து கிலோ இருக்கும். ஒரு கையில் கைப்பிடியைப் பிடித்தவாறு மறு கைகளால் தன் புடவை ஓரத்தால் முகத்தை துடைத்துக் கொண்டே திட்டில் அமர்கிறாள். என்ன மாமி! இன்னைக்காவது வெல்ல சீடை செஞ்சு கொண்டு வந்தியா? என்று பதில் தெரிந்துகொண்டே கேள்வி கேட்டான் ரங்கராஜன். அவனும் கௌரி மாமியைப் போல் ஒரு வியாபாரி. ஆனால் கௌரி மாமியைவிட கொஞ்சம் பெரிய இடம். 25 ஆம் படி. கௌரி மாமிக்கு சாம்பார் பொடி, ரசப்பொடி, தக்காளி தொக்கு, புளி தொக்கு ஆகியன கை வந்த கலை. வெள்ளிக்கிழமைகளில் மோர்க்குழம்பும் செய்து கொண்டு வருவாள். சில மணி நேரங்களிலேயே  விற்றுத் தீர்ந்துவிடும். ரங்கராஜனின் வேலை அன்றைக்கு அவனது அம்மா கொடுத்து அன