Posts

Showing posts from April, 2021

மசாலா கதை

Image
  மசாலா கதை இடது கையில் ஏற்பட்ட வெட்டுக் காயத்திலிருந்து ரத்தத் துளிகள் சொட்டு சொட்டாக கீழே விழுந்தன. அதை கவனித்த மறுகணமே டக்கென்று அந்த ஆள் காட்டி விரலை வாயில் வைத்து சுவைக்கத் தொடங்கினாள் வர்ஷா. அப்போதுதான் வலியின் வீரியமும் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய தொடங்கியது. தலையை சற்று அண்ணாந்து பார்க்க முயற்சி செய்தாள். மேலே உள்ள மரப்பலகை இடித்தது, எனவே அந்த முயற்சியை கைவிட்டாள். சுற்றி முற்றி பார்த்தாள். முற்றிலும் இருட்டாக இல்லை. இடுக்குகளிலிருந்து வெளிச்சத்தின் ஒளி ஆங்கங்கே தெரிந்தது. தன் கைகளையும் கால்களையும் அசைத்து எதையும் தட்டிவிட்டு விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார் வர்ஷா. இருப்பினும் சில நிமிடங்கள் கூட அவளால் ஒரே தோரணையில் கால்களையும் கைகளையும் குறுக்கி தலை சற்று குனிந்தவாறு    அமர முடியவில்லை. அவன் வந்து விடுவானோ? தன் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து விடுவானோ? என்ற பயம் அவளை மேலும் ஆட்கொண்டது. நெற்றியும் கைகளும் வியர்க்கத் தொடங்கியது. தன் இருதயத்துடிப்பு அசாதாரணமாக இருப்பதை உணர்கிறாள். இரண்டு உயிர்களின் மரண ஓலம் கேட்கிறது. சற்று நிதானித்து அமைதியாகவே இருக்கிறாள் வர்ஷா. ...