Posts

Showing posts from December, 2020

வாசக நாய்கள்

Image
  வாசக நாய்கள் "சரி டா.. அஞ்சு மணிக்கு பாக்கலாம்!" என்று தொலைபேசியை வைத்தார் திரு. இது தினமும் நிகழும் ஒரு தொலைபேசி உரையாடல். மணியுடன் பேசவில்லை என்றால் திருவுக்கு அந்த நாள் ஓடாது. தன் பணி ஓய்வு வாழ்க்கையில் இதை ஒரு தினசரி சடங்காகவே வைத்திருந்தார் திரு, தன் மனைவியின் படத்திற்கு மாலை சூடுவதைப் போல. அவருக்கு இருக்கும் ஒரே துணை ரோஜர். தினமும் மாமிசம் சாப்பிடவேண்டும். வேறு எதையும் உடம்பு ஒத்துக்கொள்ளாது. இந்த இரண்டு ஜீவன்களுக்கும் சமைத்து பரிமாறுவது விமலாவின் வேலை. விமலாவை வேலைக்கு பரிந்துரைத்தது மணி தான். தன் நண்பனுக்கு உணவு சமைப்பதில் பரிமாறுவதில் உதவியாக ஒருவர் இருந்தே ஆகவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று, தன் வீட்டில் வேலை செய்த விமலாவை வேண்டிக் கேட்டுக் கொண்டு திரு வீட்டிலும் சமைக்க ஒப்புக்கொள்ள வைத்தார்.  மணி வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் திரு ரோஜரயும் கூட்டிக்கொண்டு செல்வார். ரோஜருக்கு கெவின் என்றால் ஒரு தனி  பிரியம் தான். கிட்டதட்ட மணியையும் திருவையும் போல தான் ரோஜரும் கெவினும்.. இருவரும் சந்திக்கும் பொழுது, ஒரே தட்டில் தான் சாப்பிடுவார்கள்.. கடைசியில் இருக்கும் ஒரு...

தலைப்பைத்தேடி...

Image
தலைப்பைத்தேடி... பதினெட்டு... பத்தொன்பது.. இருபது.. அப்பா!! அப்பப்பா!! தினமும் எண்ணிக்கொண்டே இந்த இருபது படிகளை ஏறி இறங்குவது கௌரி மாமிக்கு வாடிக்கை. 20ஆவது படியை அவள் பாதங்கள் தொட்ட மறுகணமே அனிச்சையாக அவள் இதயத்துடிப்பு இலகுவாகும். படிகளின் ஓரம் உள்ள சற்று ஆடிக்கொண்டிருக்கும் கைப்பிடியை சந்தேகத்தோடு பிடித்தவாறு இருபத்தோராம் படியில் உள்ள திட்டு போன்ற இடத்தில் தனது பெரிய கைப்பையை வைக்கிறாள். அந்த மூட்டையின் எடை ஒரு பத்து கிலோ இருக்கும். ஒரு கையில் கைப்பிடியைப் பிடித்தவாறு மறு கைகளால் தன் புடவை ஓரத்தால் முகத்தை துடைத்துக் கொண்டே திட்டில் அமர்கிறாள். என்ன மாமி! இன்னைக்காவது வெல்ல சீடை செஞ்சு கொண்டு வந்தியா? என்று பதில் தெரிந்துகொண்டே கேள்வி கேட்டான் ரங்கராஜன். அவனும் கௌரி மாமியைப் போல் ஒரு வியாபாரி. ஆனால் கௌரி மாமியைவிட கொஞ்சம் பெரிய இடம். 25 ஆம் படி. கௌரி மாமிக்கு சாம்பார் பொடி, ரசப்பொடி, தக்காளி தொக்கு, புளி தொக்கு ஆகியன கை வந்த கலை. வெள்ளிக்கிழமைகளில் மோர்க்குழம்பும் செய்து கொண்டு வருவாள். சில மணி நேரங்களிலேயே  விற்றுத் தீர்ந்துவிடும். ரங்கராஜனின் வேலை அன்றைக்கு அவனது அம்மா கொடுத்த...