கசிந்துருகி...
கசிந்துருகி... இடதுகையால் ஸ்டீயரிங் வீலை ஒருபக்கமாக வளைத்துக் கொண்டே, வலதுகையால் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்த ரஷ்ய மொழி பாடலின் ஒலி அளவை சன்னமாக குறைத்து, பிரேக்கில் இதமாக காலை வைத்து அழுத்தினான் ஆண்ட்ரியா. பாட்டிலில் இருந்த சுடுநீரை அனிச்சையாக ஒருமுறை குடித்து வைத்தான். பின்னர், வண்டியை விட்டு இறங்கி வழக்கம் போல், சர்ச் வாசலருகே ஓரமாக நின்றான். தனது சிறு வயதில் இருந்தே, தன் தந்தை சொல்லிக்கொடுத்த பழக்கம் அது. மார்ட்டின் அந்தச் சர்ச்சில் தான் பணிபுரிந்தார். இறக்கும் முன், தன் தந்தை தன்னிடம் சொன்ன ஒரே வேலையை ஒரு கணம் நினைத்துக் கொண்டான். தனக்கே உரிய பாணியில் கடவுளை வேண்டிய பிறகு, எதார்த்தமாக சுற்றி முற்றி பார்த்தான் ஆண்ட்ரியா. தோளில் இருந்த துப்பாக்கியை சரி செய்துகொண்டு, காரை ஓட்ட தொடங்கினான். முழு இருளும் அல்லாத முழு ஒளியும் அல்லாத, அந்த ஸ்வால்பார்ட் தனித்துவத்தை வழக்கம்போல் ரசித்தபடியே மெதுவாக வாகனத்தை செலுத்தினான் ஆண்ட்ரியா. சாலையில் வேறு எந்த வாகனங்களும் இல்லை. தூரத்தில் ஓரிரண்டு பனிக்கரடிகள் மட்டும் அமர்ந்திருந்தன. ஜோனாஸ் தனது நான்கு நாய்களையும் கயிறுகளில் ப...